வணக்கம் நண்பர்களே !

டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேசன் 2013 தமிழ்ப்புத்தாண்டு திருநாளில் தமிழ்நாட்டு கலை, கலாச்சாரம் ,மற்றும் சமூகசேவையை செயற்குழு உறுப்பினர்கள் வழியாக மேம்படுத்தும் வண்ணம் மினசோட்டாவில்உருவாக்கப்பட்டது. டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேசன் ஒரு தன்னார்வ இலாபநோக்கமற்ற அமைப்பு. நம் உன்னதத் தமிழை அருமைக்குழந்தைகள் பேசி,படித்துப் பழக தமிழ் பாடசாலையும் உருவாக்கப்பட்டது.

மினசோட்டாவில் தமிழையும் , தமிழினத்தையும் ,தமிழ் கலை கலாச்சாரத்தையும் நட்புறவோடு ஒன்றிணைத்து வழி நடத்திச் செல்ல இந்த கூட்டமைப்பு அரும்பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.

முன்னாள் இந்திய ஜனாதிபதி மேதகு டாக்டர் உயர்திரு.ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் தம் பொற்கரங்களால் நமது டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேசன் இணையதளத்தை தொடங்கி வைத்து டுவின் சிட்டீஸ் தமிழ் பாடசாலையின் புத்தகங்களை வெளியிட்டது டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேசன் மற்றும் பாடசாலையின் வரலாற்றில் ஒரு மைல் கல்!

மினசோட்டாவுக்கு புதிதாக குடிபெயரும் தமிழ்க்குடும்பங்களுக்கு அனைத்துவித வழிகாட்டுதலும் நல்கி தமிழ் சமூகத்தோடு வழக்குத்தமிழை,தமிழ்நாட்டு பாரம்பரிய,கலாச்சாரத்தை பறைசாற்றுவது எங்கள் தலையாய முயற்சி!

Thanks to Our Proud Sponsors

TCTA

TwinCities Tamil Association
© Copyright 2020 TCTA. All rights reserved